by People for Equality & Relief in Lanka (PEARL)
Washington D.C.; November 27, 2022 — Today, on Maaveerar Naal (Tamil National Remembrance Day), thousands of Eelam Tamils will gather together by makeshift cemeteries and memorial plaques around the world as they remember those who gave their lives and futures for the liberation of the Tamil nation from the oppression of Sinhala-Buddhist majoritarianism. While Sri Lankan security forces continue to surveil, harass and intimidate Tamils who wish to commemorate and remember the sacrifices of those who died, Maaveerar Naal still serves as a powerful display of collective defiance against the Sri Lankan state’s narrative of a defeated Tamil nation.
Thirteen years after the end of the armed conflict, impunity for the war crimes, crimes against humanity and genocide committed against the Tamils by government forces in the last stages of the armed conflict looms over the island.
Sinhala-Buddhist nationalism, the root cause of the conflict, remains unaddressed. The Sinhala-Buddhist nationalist state-building project sustains the marginalization and oppression of Tamils in their homeland, through the suffocating militarization of the North-East, the Sinhalization and Buddhisization of Tamil lands, and the inescapable unitary system of the Sri Lankan state. The current economic collapse, which is a result of irrational policies undergirded by Sinhala-Buddhist nationalism continues to devastate the Tamil homeland, which already has been the most affected during the war. Despite decades of resistance to Sinhala-Buddhist nationalist politics, Tamils are repeatedly punished by the failures of the Sri Lankan government and the wilful ignorance of the general electorate.
வோஷிங்டன் டி.சி.; நவம்பர் 27, 2022 – மாவீரர் நாளான (தமிழ்த் தேசிய நினைவேந்தல் நாள்) இன்று, சிங்கள-பௌத்தப் பெரும்பான்மைவாதத்தின் அடக்குமுறையிலிருந்து தமிழ்த் தேசத்தை விடுவிப்பதற்காகத் தமது உயிரையும், எதிர்காலத்தையும் தியாகம் செய்தவர்களை நினைவுகூர்வதற்காக, உலகெங்கிலும் உள்ள தற்காலிகக் கல்லறைகளினதும், நினைவுப் பலகைக்கற்களினதும் அருகில் ஆயிரக் கணக்கான ஈழத் தமிழர்கள் ஒன்றுகூடுவர். இறந்தவர்களின் தியாகங்களை நினைவுகூர விரும்பும் தமிழர்களை, இலங்கைப் பாதுகாப்புப் படையினர் தொடர்ச்சியாகக் கண்காணித்தும், துன்புறுத்தியும், அச்சுறுத்தியும் வருகின்றபோதும், தோற்கடிக்கப்பட்ட தமிழ்த் தேசம் என்ற இலங்கை அரசின் கதையாடலுக்கு எதிரான கூட்டு எதிர்ப்பின் ஓர் வலுவான வெளிப்பாடாக மாவீரர் நாள் இன்றும் செயற்படுகிறது.ஆயுத மோதல் முடிவுக்கு வந்து பதின்மூன்று ஆண்டுகள் கழிந்த பின், அம்மோதலின் இறுதிக் கட்டங்களில் அரச படைகளால் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், இனவழிப்பு என்பவற்றுக்கான தண்டனையிலிருந்து அதைப் புரிந்தவர்கள் விலக்களிக்கப்பட்டிருக்கும் நிலைமையே இலங்கைத் தீவில் நிலவுகிறது.
மோதலின் மூலகாரணமான சிங்கள-பௌத்தத் தேசியவாதம் இன்னும் விடையளிக்கப்படாமலேயுள்ளது. சிங்கள-பௌத்தத் தேசியவாத அரசைக் கட்டியெழுப்பும் செயற்றிட்டமானது, வடக்கிலும், கிழக்கிலும் அதிகரித்துக்கொண்டே செல்லும் இராணுவமயமாக்கற் செயற்பாடுகளினூடும், தமிழரின் நிலங்களைச் சிங்களமயமாக்குதல் மற்றும் பௌத்தமயமாக்குதலினூடும், இலங்கை அரசின் தவிர்க்கவியலாத ஒற்றையாட்சி முறைமையினூடும், தமிழர்கள் அவர்களது தாயகத்தில் ஓரங்கட்டப்படுவதையும், ஒடுக்கப்படுவதையும் தொடர்ந்தும் தக்கவைக்கிறது. சிங்கள-பௌத்தத் தேசியவாதத்தை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட பகுத்தறிவற்ற கொள்கைகளின் விளைவான தற்போதையப் பொருளாதாரச் சீர்குலைவானது, ஏற்கனவே போரின்போது அதிகளவிற் பாதிப்புக்குள்ளான பகுதியாகவுள்ள தமிழர் தாயகத்தை மேலும் பாதிப்பதாக அமைந்துள்ளது. சிங்கள-பௌத்தத் தேசியவாத அரசியலைப் பல தசாப்தங்களாக எதிர்க்கின்றபோதிலும், தமிழர்கள் இலங்கை அரசின் தோல்விகளாலும், பொது வாக்காளர்களின் வேண்டுமென்ற அறியாமையினாலும் தொடர்ந்தும் தண்டிக்கப்படுகின்றனர்.
வடக்கிலும், கிழக்கிலும் உள்ள தமிழ் மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும், அதிகாரப் பரவலாக்கத்திற்காகவும், அதிகாரப் பகிர்விற்காகவும், அர்த்தமுள்ள சுயநிர்ணய உரிமைக்காகவும் தொடர்ச்சியாக அழைப்பு விடுத்தவண்ணமுள்ளனர். தீர்மானங்களை எடுப்பதில் சிங்கள-பௌத்த அதிகாரம் தொடர்ச்சியாகத் தோல்வியடைந்துள்ளதையும், அதில் அது திறமையற்றிருப்பதையும் கருத்திற்கொண்டு, தமிழர்களைத் தமது பொருளாதார மற்றும் அரசியல் எதிர்காலத்தைத் தாமே தீர்மானிக்க அனுமதிப்பதற்கு இதுவே சரியான நேரம் ஆகும். இவ்வாண்டின் தொடக்கத்திற் தெற்கில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களுக்குக் கிடைத்த பரவலான ஊடகக் கவனம் தமிழ் மக்களுக்குக் கிடைக்காத போதிலும், அவர்களுக்குள்ள தேசிய உணர்வும், அவர்களின் கூட்டு எதிர்ப்பும், தமிழ் மக்களை நீதி, பொறுப்புக்கூறல், சுயநிர்ணய உரிமை என்பவற்றுக்கான அவர்களது போராட்டத்தில் ஒன்றிணைக்கிறது. இதனூடாக, சுதந்திரத்திற்கானதும், விடுதலைக்கானதுமான போராட்டம் உயிர்ப்புடனுள்ளது.