Rep. Don Davis’ Speech in Congress

by Rep. Don Davis (D-NC),  US Congress, Washington, DC, December 12, 2023

 

Don Davis

Representing North Carolina’s 1st District

 

டொன் டேவிஸ்

வட கரோலினாவின் 1வது மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்பவர்

 

Brief Floor Remarks on the situation with Tamils

தமிழர்களின் நிலைமை பற்றிய சபையின் முன்னான சுருக்கமான கருத்துக்கள்

Mr. Speaker, I ask unanimous consent to address the House for one minute and to revise and extend my remarks.

சபாநாயகர் அவர்களே: சபையில் ஒரு நிமிடம் உரையாற்றுவதற்கும் எனது கருத்துக்களை மறுபரிசீலனை செய்து நீட்டிப்பதற்கும் சபையின் ஏகமனதான சம்மதத்தை கோருகின்றேன்

●     Mr. Speaker: I stand with the Eelam Tamils in Sri Lanka.

●      சபாநாயகர் அவர்களே: நான் இலங்கையில் உள்ள ஈழத் தமிழர்களுடன் இணைந்து நிற்கிறேன்.

●     Following the British departure in 1948, the unification of these kingdoms under a Sinhalese-dominated Sri Lanka led to the marginalization of the Tamil people.

●      1948 இல் பிரித்தானியர் வெளியேறியதைத் தொடர்ந்துசிங்களவர்கள் ஆதிக்கம் செலுத்திய சிறீ லங்காவின் கீழ் இந்த இராச்சியங்கள் ஒன்றிணைக்கப்பட்டதனால் தமிழ் மக்கள் ஓரங்கட்டப்பட்டனர்.

●     This process disregarded the Tamils’ right to self-determination.

●      இந்த செயன்முறை தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை புறக்கணித்தது.

●     State-sponsored discrimination and violence against Tamils sparked a tragic 30-year ethnic conflict, resulting in the 2009 Tamil Genocide.

●      அரச ஆதரவுடன் தமிழர்களுக்கு எதிராக நடாத்தப்பட்ட பாகுபாடு மற்றும் வன்முறை துயர் மிகுந்த 30 ஆண்டுகால இன முரண்பாட்டை தூண்டி 2009 ஆம் ஆண்டு தமிழ் இனப்படுகொலைக்கு வழிவகுத்தது.

●     Despite the United Nations Human Rights Council’s efforts for accountability, Sri Lanka, with China’s support, withdrew in 2020, further blocking justice for the Tamil community.

●      ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை பொறுப்புக்கூறலுக்கான முயற்சிகளை மேற்கொண்ட போதிலும்இ இலங்கைஇ சீனாவின் ஆதரவுடன்இ 2020 இல் அதிலிருந்து வெளியேறியமை தமிழ் சமூகத்திற்கான நீதி கிடைப்பதை மேலும் தடுக்கிறது.

●     The recent arrests of Tamils for participating in peaceful events under the Prevention of Terrorism Act are deeply troubling.

●      அமைதியான நிகழ்வுகளில் பங்கேற்றதற்காக அண்மையில் தமிழர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டமை மிகவும் கவலையளிக்கிறது.

●     Therefore, I call upon my colleagues in Congress to recognize and address the ongoing oppression of the Tamil People.

●      எனவேகாங்கிரஸில் உள்ள எனது சகாக்களை  தமிழ் மக்கள் மீது ஒடுக்குமுறை நடந்து வருவதை அங்கீகரித்து அதற்கு தீர்வுகாணுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

●     We must support a permanent solution that ensures stability and peace in this vital part of the Indo-Pacific.

●      இந்தோ-பசிபிக்கின் இந்த முக்கிய பகுதியில் ஸ்திரத்தன்மை மற்றும் அமைதியை உறுதி செய்யும் நிரந்தர தீர்வுக்கு நாம் ஆதரவளிக்க வேண்டும்.

●     And we must honor our commitment to human rights and democracy.

●      மேலும் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்திற்கான எமது உறுதிப்பாட்டை நாம் மதிக்க வேண்டும்.

●     I yield back.

●      அமர்கின்றேன்

Comments are disabled on this page.