CTC in Successful Defamation Lawsuit Against Rohan Gunaratna

Canadian Tamil Congress (CTC) Awarded $53,000 in Successful Defamation Lawsuit Against Rohan Gunaratna
Prior to the final military onslaught of May 2009 in Northern Sri Lanka which resulted, according to UN estimates, in the massacre of 40,000 to 70,000 Tamils, the Government of Sri Lanka set out to brand all Tamils and Tamil diaspora groups, and anyone who disagreed with or spoke out against them, as terrorists.  In an effort to gain the support of Western governments and its citizens, the Sri Lankan government undertook this ploy using its widespread power—through its various embassies and consulate officials, lobby firms, sympathizers and other agents.  This smear campaign by the government and its sympathizers had a profoundly adverse effect on many Tamils and continues to do so today.
One such smear was made by Sri Lankan born academic and “terrorism expert” Rohan Gunaratna, head of the International Centre for Political Violence and Terrorism Research at Nanyang Technological University in Singapore. In a February 2011 article published by Lakbima News titled “Gunaratna says only 1400 people died in final war, warns Canada is emerging as a LTTE hub,” Gunaratna was quoted as saying, “the LTTE is operating under the name of the Canadian Tamil Congress, which is the main LTTE front organization in Canada.” Gunaratna went onto state, “the Canadian government is aware of this and currently investigating.”
Upon becoming aware of these patently false remarks, and amidst negative media attention, Canadian Tamil Congress (CTC) commenced legal action against Rohan Gunaratna for defamation. On January 21, 2014, after the case found its way through Canada’s justice system, Justice Stephen E. Firestone of the Ontario Superior Court of Justice ruled in CTC’s favour, awarding $37,000 in general damages and $16,000 in costs against Gunaratna.
In his written reasons, Justice Firestone stated, among other things, “the statements were clearly defamatory, either directly or by innuendo, because they imply CTC is involved in the commission of violent and illegal activity.” He further stated, “it is unequivocal and uncontroverted that these statements were, in fact, false and untrue”.
David Poopalapillai, National Spokesperson for CTC, applauded the court decision. “The Court’s decision is a vindication to CTC and its members and supporters. The surest way to attempt to destroy an ethnic group is to make its members afraid to even admit that they are part of that group for fear of being labelled terrorist sympathizers or terrorists themselves,” Poopalapillai continued. “The Sri Lankan government and its sympathizers have labelled all Tamils as terrorists for far too long—this judgment is a victory not only for CTC but for Tamils everywhere.”
Daniel Iny of Sack Goldblatt Mitchell LLP, legal counsel for CTC in the trial against Gunaratna, stated, “For a not-for-profit organization like CTC, its reputation is its lifeblood and its currency. The Court’s decision was an affirmation for CTC and its supporters in its recognition that Gunaratna’s words were plainly defamatory of CTC.”
With the UN Human Rights Council convening in just under two weeks, the human rights situation in Sri Lanka has again become the focus of increased international attention. The Sri Lankan Government has in response accelerated its propaganda campaign against Tamils in an effort to steer attention away from mounting evidence of war crimes and crimes against humanity. At this critical juncture, CTC remains committed to ensuring that the image of Tamils will no longer be tarnished by the Sri Lankan government and its sympathizers.
For media inquiries and interviews please contact: Mr. David Poopalapillai – 905-781-7034, National Spokesperson, CTC. Canadian Tamil Congress Head Office: 416-240-0078

 

VIDEO:
————————————————————————————————————————————-
றோகன் குணரத்தின அவர்களுக்கு எதிரான அவதூறு வழக்கில் கனடிய தமிழர் பேரவைக்கு 53,000 டொலர்கள்இழப்பீடு நீதிமன்றம் உத்தரவு
மே 2009 இல்    வட சிறீலங்காவில்  அரசு மேற்கொண்ட  இறுதி இராணுவத் தாக்குதலில்  அய்யன்னா சபையின்மதிப்பீட்டின்படி 40,000 – 70,000 தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். அதற்கு முன்னர் சிறீலங்கா அரசு எல்லாத் தமிழர்களையும்புலம்பெயர் தமிழர் அமைப்புக்களையும்  மற்றும் தங்களுடன் கருத்து மாறுபட்ட அல்லது எதிராகப்  பேசியவர்களையும்பயங்கரவாதிகள் என முத்திரை குத்தியது.  சிறீலங்கா அரசு  தனக்குள்ள பரந்துபட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி மேற்குலகஅரசுகளதும்  பொது மக்களதும் ஆதரவை வென்றெடுக்க இந்தத் தந்திரத்தை மேற்கொண்டது. அதன் நிமித்தம் தனதுபல்வேறு தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரக அலுவலகர்கள்இ செல்வாக்குத் திரட்டும் நிறுவனங்கள்இ அனுதாபிகள்மற்றும் முகவர்களைப் பயன்படுத்தியது. சிறீலங்கா அரசு மற்றும் அதன் அனுதாபிகளது  இத்தகைய பரப்புரை பல தமிழர்கள்மீது  மிக ஆழமான எதிர்விளைவுகளை ஏற்படுத்தியது.  இந்த நிலை இன்றும் நீடிக்கிறது.
இப்படியான  கறைபூசலில் ஈடுபவர்களில் சிறீலங்காவை பிறப்பிடமாகக் கொண்ட  ‘பயங்கரவாதம் பற்றிய நிபுணர்’ எனப்பெயரெடுத்த றோகன் குணரத்தின ஒருவராவர்.  இவர் சிங்கப்பூர்இ நன்யாங்  தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தின்   அரசியல்வன்முறை மற்றும் பயங்கரவாத ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள பன்னாட்டு மையத்தின் தலைவர் (Head of the International Centre for Political Violence and Terrorism Research at Nanyang Technological University in Singapore) ஆவர்.  2011 ஆம் ஆண்டு பெப்ரவரி இல்லக்பீம ஊடகம்  ‘குணரத்தின  இறுதிப் போரில் 1,400 பேர் மட்டுமே இறந்தார்கள், கனடா தமிழீழ விடுதலைப் புலிகளின்குகையாகத்   தோற்றம் கொண்டுள்ளது என எச்சரிக்கிறார்’ எனத்  தலைப்பிட்டு ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது.மேலும் லக்பீம   குணரத்தினா சொன்னதாக அவரை மேற்கோள் காட்டி ‘தமிழீழ விடுதலைப் புலிகள் கனடிய தமிழ்க்காங்கிரஸ் என்ற பெயரில்  இயங்குகிறது.  இந்த அமைப்பு கனடாவில் உள்ள புலிகளது  முக்கிய  முகப்பு அமைப்பாகும்.’ தொடர்ந்து குணரத்தின ‘கனடிய அரசுக்கு இது தெரியும். இப்போது கனடிய அரசு அதுபற்றிய விசாரணையைமேற்கொண்டுள்ளது’  எனச் சொன்னார்.
இப்படி அப்பட்டமான பொய்க் கூற்றுக்கள் பற்றி தெரியவந்தவுடன்  – ஊடகங்களின்  எதிர்மறை கவனிப்புக்கு மத்தியில் -கனடிய தமிழர் பேரவை றோகன் குணரத்தினத்துக்கு எதிராக அவதூறு வழக்குத் தொடுத்தது.  நீதிமன்றத்தில் இந்த வழக்குவிசாரிக்கப்பட்ட பின்னர் சனவரி 21, 2014 இல்  ஒன்ரேறியோ உயர் நீதிமன்ற நீதியரசர் Stephen E. Firestone கனடிய தமிழர்பேரவைக்கு சாதகமா தீர்ப்பு வழங்கினார்.  குணரத்தினாஇ கனடிய தமிழர் பேரவைக்கு 37,000 டொலர் பொது இழப்பாகவும்  16,000 டொலர் வழக்குச்  செலவாகவும் செலுத்த வேண்டும் என  தீர்ப்பு வழங்கப்பட்டது.
தனது எழுத்து மூல காரணங்களில் நீதியரசர் Firestone (குணரத்தின) கூறியவை நேரிடையாக அல்லது  இழிவுபடுத்துமுகமான  தெளிவான அவதூறாகும்.  காரணம்  கனடிய தமிழர் பேரவை  வன்முறை மற்றும் சட்டத்துக்கு மாறானநடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது எனச் சுட்டின.   மேலும்   ‘இந்தக் கூற்றுக்கள் அய்யப்பாட்டுக்கு  இடமில்லாதவை.மறுத்துரைக்க முடியாதவை.   உண்மையில் அவை ஆதாரமற்றவை.  உண்மைக்கு மாறானவை’  நீதியரசர் குறிப்பிட்டார்.
கனடிய தமிழர் பேரவையின் பேச்சாளர் டேவிட் பூபாலபிள்ளை நீதிமன்றத்தின் தீர்ப்பை பாராட்டி வரவேற்றார். தொடர்ந்து’நீதிமன்றத்தின் தீர்ப்பு கனடிய தமிழர் பேரவைஇ அதன் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள்  ஆகியோரதுநேர்மையை உறுதிப்படுத்தியுள்ளது. ஒரு  இனக் குழுமத்தை அழிப்பதற்கு உள்ள சரியான வழி என்னவென்றால்  அந்தக்குழுமத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள்  எங்கே தங்களை பயங்கரவாதத்தின் அனுதாபிகள் என்றோ அல்லது பயங்கரவாதிகள்என்றோ  முத்திரையிடப்பட்டு விடுவோமா என அச்சப்பட வைப்பது ஆகும்’ என பூபாலபிள்ளை சொன்னார்.  ‘சிறீலங்காஅரசும் அதன் அனுதாபிகளும் நீண்ட காலமாக தமிழர்களைப் பயங்கரவாதிகள் என முத்திரை குத்தி வந்துள்ளார்கள். இப்போது கிடைத்துள்ள நீதிமன்றத் தீர்ப்பு கனடிய தமிழர் பேரவைக்கு அல்ல தமிழ்மக்களுக்கே சொந்தமான  வெற்றியாகும்.
கனடிய தமிழர் பேரவையின் சட்ட வழக்கறிஞர் டானியல் இனி (Daniel Iny of Sack Goldblatt Mitchell LLP) பேசும் போது ‘ஆதாயநோக்கற்ற கனடிய தமிழர் பேரவை போன்ற அமைப்புக்கு  அதன்  நற்பெயரும் நாணயமும்தான்  உயிர்நாடி.   கனடிய தமிழர்பேரவைக்கு   அவமானம் தேடித்தருவதாக  குணரத்தினாவின் கூற்றுக்கள் அமைந்திருப்பதாக நீதிமன்றம் தீர்ப்புவழங்கியிருப்பது கனடிய தமிழர் பேரவைக்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் ஆறுதல் தருவதாக உள்ளது’ எனக்குறிப்பிட்டார்.
இன்னும் இரண்டு வாரத்தில் அய்க்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை கூட இருக்கிறது. சிறீலங்காவின் மனித உரிமைநிலைமை பற்றி பன்னாட்டு நாடுகளது கூடுதலான கவனத்தை  மனித உரிமைப் பேரவை மீண்டும் ஈர்த்துள்ளது.போர்க்குற்றங்கள்இ மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் பற்றிய கவனத்தைத் திசை திருப்புவதற்கு சிறீலங்கா அரசுதமிழர்களுக்கு எதிரான தனது பரப்புரையை முடுக்கிவிட்டுள்ளது.  இந்த நெருக்கடியான கட்டத்தில்  தமிழர்களது படிமத்தைசிறீலங்கா மற்றும் அதன் அனுதாபிகளால் கறைப்படுத்த எடுக்கும் முயற்சியை முறியடிக்க கனடிய தமிழர் பேரவை தொடர்ந்து  தன்னை ஈடுபடுத்தும் என்பதை அறியத்தருகிறது.
ஊடக  உசாவல்களுக்கும் நேர்காணல்களுக்கும் கனடிய தமிழர் பேரவையின் தேசிய பேச்சாளர் திரு டேவிட்பூபாலபிள்ளையோடு தொடர்பு கொள்ளவும்.
தொ.பே. எண் 905 -781 -7034. கனடிய தமிழர் பேரவையின் தலைமையகம் 416 – 240 -0078.

Posted .

Filed under Diaspora.

No Responses to “CTC in Successful Defamation Lawsuit Against Rohan Gunaratna”