Pongalo Pongal 2015

by Manoharan Sambandam, January 11, 2015

பொங்கலோ பொங்கல்      

 

பாடு வோம் பாடு வோம் பாட்டுப் பாடு வோம்

ஆடு வோம் ஆடு வோம் ஆட்டம் ஆடு வோம்

 

புதுப் பொங்கலோ பொங்கல்

தமிழ்ப் பொங்கலோ பொங்கல்

தைப் பொங்கலோ பொங்கல்

தைதைப் பொங்கலோ பொங்கல்

 

சக்திதரும் சூரியனின் பொங்கலோ பொங்கல்

பச்சரிசி அச்சுவெல்லம் பொங்கலோ பொங்கல்

மஞ்சள்கொத்துப் பானையிலே பொங்கலோ பொங்கல்

இஞ்சிக்கொத்துப் பானையிலே பொங்கலோ பொங்கல்

புதுப் பொங்கலோ பொங்கல்……. பாடு வோம் பாடு வோம்…….

 

முத்துமணி நெல்விளையும் பொங்கலோ பொங்கல்

தித்திக்கின்ற செங்கரும்புப் பொங்கலோ பொங்கல்

பச்சைப் பசும்காய்கறிகள் பொங்லோ பொங்கல்

புத்தம் புது ஆடையுடன் பொங்கலோ பொங்கல்

புதுப் பொங்கலோ பொங்கல்……. பாடு வோம் பாடு வோம்…….

எல்லாருக்கும் நல்ல நேரம் பொங்கலோ பொங்கல்    

எல்லாருக்கும் நன்றி சொல்ல பொங்கலோ பொங்கல்

எல்லாருமே சேர்ந்து உண்ணும் பொங்கலோ பொங்கல்

எல்லாருமே சேர்ந்து வாழும் பொங்கலோ பொங்கல்

புதுப் பொங்கலோ பொங்கல்……. பாடு வோம் பாடு வோம்…….

கொட்டு வோம் கொட்டு வோம் மேளம் கொட்டு வோம்

தட்டு வோம் தட்டு வோம் தாளம் தட்டு வோம்

 

மாட்டுப் பொங்கலோ பொங்கல்

வீட்டுப் பொங்கலோ பொங்கல்

கன்னிப் பொங்கலோ பொங்கல்

காணும் பொங்கலோ பொங்கல்

 

மாடுமனை தேடிவரும் பொங்கலோ பொங்கல்

காளைப்பசு மாடுகளின் பொங்கலோ பொங்கல்

பாடுபட்ட மக்களுக்குப் பொங்கலோ பொங்கல்

நம்மகுல தெய்வத்துக்கும பொங்கலோ பொங்கல்

மாட்டுப் பொங்கலோ பொங்கல்…. கொட்டு வோம்

வண்ணவண்ணக் கோலத்துடன் பொங்கலோ பொங்கல்

வாசலிலே பூசணிப்பூ பொங்கலோ பொங்கல்

கும்மிகொட்டும் கோலமயில் பொங்கலோ பொங்கல்

ஜல்லிக்கட்டு காளைகளின் பொங்கலோ பொங்கல்

மாட்டுப் பொங்கலோ பொங்கல்…. கொட்டு வோம்

வந்தவர்க்கு அள்ளித் தரும் பொங்கலோ பொங்கல்

வாழவழி காட்டும் நம்ம பொங்கலோ பொங்கல்

வள்ளுவனின் சொல்விளங்கும் பொங்கலோ பொங்கல்

வெற்றிபெற வாழ்த்துசொல்லும் பொங்கலோ பொங்கல்

மாட்டுப் பொங்கலோ பொங்கல்…. கொட்டு வோம்

 

GUIDE TO SING PONGALO PONGAL IN JINGLE BELLS TUNE

 

English tune

Jingle bells, jingle bells,
Jingle all the way.
Oh! what fun it is to ride
In a one-horse open sleigh.

Tamil lyrics

 

பாடு வோம் பாடு வோம் பாட்டுப் பாடு வோம்

ஆடு வோம் ஆடு வோம் ஆட்டம் ஆடு வோம்

 

The same tune

சக்திதரும் சூரியனின் பொங்கலோ பொங்கல்

பச்சரிசி அச்சுவெல்லம் பொங்கலோ பொங்கல்

மஞ்சள்கொத்துப் பானையிலே பொங்கலோ பொங்கல்

இஞ்சிக்கொத்துப் பானையிலே பொங்கலோ பொங்கல்

====================================================================

Enlish tune

Dashing through the snow
In a one-horse open sleigh
O’er the fields we go
Laughing all the way

Tamil lyrics

புதுப் பொங்கலோ பொங்கல்

தமிழ்ப் பொங்கலோ பொங்கல்

தைப் பொங்கலோ பொங்கல்

தைதைப் பொங்கலோ பொங்கல்

Comments are disabled on this page.